குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
வெலிகடை சிறைச்சாலையில் 27 கைதிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்படும் சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த படுகொலை சம்பவம் நடைபெற்ற காலத்தில் இந்த சந்தேக நபர் சிறைச்சாலைகள் திணைக்களத்தில் உயர் பதவியை வகித்ததாக கூறப்படுகிறது. சிறைக்கைதிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ( புனர்வாழ்வு) எமில் ரஞ்சன் லமாஹேவா, பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ ஆகியோர் அண்மையில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.