Home இந்தியாமு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

by admin


சென்னையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அவரது வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனை செய்துள்ளனர்.  நேற்று நள்ளிரவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய நபர், ஸ்டாலின் வீட்டின் மீது குண்டு வீசுவதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ; மு.க.ஸ்டாலின் வசிக்கும் ஆழ்வார் பேட்டை வீடு மற்றும் கருணாநிதி வசிக்கும் கோபாலபுரம் வீடுகளில் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனை செய்தனர். வீட்டைச் சுற்றி காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டது.

வீடு முழுவதும் சோதனையிட்டதில் சந்தேகப்படும்படியான எந்த பொருளும் கிடைக்கவில்லை என்பதுடன் அப்பகுதியில் சந்தேகப்படும்படியான நபர்களும் சிக்காத நிலையில் அது வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More