குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள நிலையி்ல், ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியமான கூட்டம் ஒன்று இன்று மாலை 3 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கம் வகிக்கும் சகல அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ள உள்ளனர்.
உள்நாட்டில் தங்கியிருக்கும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்றைய தினம் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துக்கொள்ள உள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.