குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென் ஆபிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் தனது இறுதிப் போட்டியின் போது உபாதைக்கு உள்ளாகியுள்ளார். தென் ஆபிரிக்காவின் ஜொஹர்னஸ்பேர்க் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறுகின்ற நிலையில் மூன்றாம் நாள் ஆட்ட நேரத்தின் போது மோர்கல் உபாதையினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
மோர்கல் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியுடன் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்கின்றார். சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்ட மோர்கல் கழக மட்டப் போட்டிகளிலும் பிராந்திய போட்டிகளிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.