குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ட்ரம்பின் வரிக் கொள்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா சில தீர்மானங்களை அறிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சீன உற்பத்திகள் மீது அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டரம்ப் வரிகளை விதித்திருந்தார். இந்த வரி விதிப்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அமெரிக்க உற்பத்திகள் மீது சீனா வரி விதித்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் 128 பொருட்கள் மீது 25 வீத வரியை சினா விதித்துள்ளது. இந்த வரி விதிப்பினால் சுமார் மூன்று பில்லியன் டொலர் ஏற்றுமதி பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என சீனா முன்னதாக அறிவித்திருந்தது.எனினும், தமது பொருளாதாரத்திற்கு பாதக நிலையை ஏற்படுத்தினால் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை எனவும் சீனா தெரிவித்துள்ளது.