Home இலங்கைகாணாமல் போனவர்கள் தொடர்பான செயலகத்தில் அரசியல் – இராணுவ ரீதியான தலையீடுகள் இருக்காது – முல்லையில் மங்கள

காணாமல் போனவர்கள் தொடர்பான செயலகத்தில் அரசியல் – இராணுவ ரீதியான தலையீடுகள் இருக்காது – முல்லையில் மங்கள

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காணாமல் போன தமது பிள்ளைகளை தேடி தருமாறு கோரி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்திற்கு அருகில் கடந்த 389 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தாய்மாரை சந்திக்க நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர நேற்று முன்தினம் அங்கு சென்றுள்ளார். அமைச்சரிடம் பேசிய காணாமல் போன பிள்ளைகளின் தாய்மார் தமக்கு துரிதமான தீர்வு அவசியம் எனக் கூறியுள்ளனர்.

இங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் காணாமல் போனவர்கள் தொடர்பான செயலகம் தனது பணிகளை விரைவில் ஆரம்பிக்கும் எனவும் அதிகாரிகள் முல்லைத்தீவுக்கு வந்து பெற்றோரிடம் தகவல்களை பெற்றுக்கொள்வார்கள் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த விடயத்தில் தான் தனிப்பட்ட ரீதியில் தலையிட்டு நடவடிக்கைகளை எடுப்பதாகவும் காணாமல் போனவர்கள் தொடர்பான செயலகத்தில் அரசியல் மற்றும் இராணுவ ரீதியான தலையீடுகள் இருக்காது எனவும் அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More