குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பொருளாதார முகாமைத்துவக் குழு இன்னும் கலைக்கப்படவில்லை என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, நிதியமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
பொருளாதார முகாமைத்துவக் குழு கலைக்கப்பட்டுள்ளதாக பதவி வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை எனவும் அமைச்சரவையில் இருப்பதால், அது பற்றிய விடயங்கள் தனக்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொருளாதார முகாமைத்துவக் குழுவை கலைக்க வேண்டும் என முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை ஆராய இரண்டு வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் மங்கள கூறியுள்ளார்.
பிரதமர் தலைமையிலான பொருளாதார முகாமைத்துவக் குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய கலைக்கப்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.