குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
இலங்கை அரசாங்கம் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் இருந்து விலகிக்கொள்ள உள்ளது. கடந்த ஒன்பது வருடங்களாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் தொடர்ந்தும் செயற்பட்டதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
எந்தநாடும், மனித உரிமை ஆணைக்குழுவில் தொடர்ந்தும் ஒன்பது ஆண்டுகள் செயற்பாடுகளை முன்னெடுத்ததில்லை. இலங்கை அரசாங்கம் தனது இந்த தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராத் அல் ஹூசைனைக்கு அறிவித்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக மூன்று யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.