குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இஸ்ரேல் நாட்டை அங்கீகரிப்பதாகவும் தமக்கான நிலம் இஸ்ரேலியர்களுக்கு இருக்க வேண்டும் எனவும் சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் சல்மான் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இளவரசர் சல்மான் அங்கு இதனை கூறியுள்ளார்.
சவூதி இளவரசரின் இந்த கருத்தை அடுத்து, சவூதிக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நல்லறவுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் என மத்திய கிழக்கு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேலிய யூதர்களுக்கும் சவுதிக்கும் இடையில் எந்த பிரச்சினைகளும் இல்லை. சவூதிக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள பொதுவான பல விடயங்கள் உள்ளதாகவும் இளவரசர் குறிப்பிட்டுள்ளார்.
சவூதி அரேபிய ராஜ்ஜியத்தின் முடிவுக்குரிய இளவரசரான சல்மான், தனது தந்தையான அரசர் ஊடாக பல புதிய மறுசீரமைப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறார். சவூதியை உலகுக்கு திறந்து விடும் முயற்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார். இளவரசர் சல்மான் அண்மையில் இஸ்ரேலுக்கும் பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் உள்ள பல முஸ்லிம் நாடுகள் இஸ்ரேல் நாட்டை இன்னும் அங்கீகரிக்காத நிலையில், சவூதி இளவரசர் இஸ்ரேலை அங்கீகரிப்பதாக கூறியிருப்பது முஸ்லிம் உலகில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.