குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள யூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கி பிரயோக சம்பவம் ஒன்று இன்று நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் துப்பாக்கிதாரி என நம்பப்படும் பெண்ணொருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என சென் புரூனோ காவல்துறையினர்; தெரிவித்துள்ளனர்.
கூகிள் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் நிறுவனத்தில், துப்பாக்கி பிரயோக சம்பவம் நடைபெற்ற போது அங்கு 3 ஆயிரம் ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர். துப்பாக்கி பிரயோக சம்பவத்தை அடுத்து யூடியூப் ஊழியர்கள் அருகில் உள்ள கட்டிடம் ஒன்றுக்கு ஓடிச் சென்று தம்மை தற்காத்துக்கொண்டுள்ளனர். மேலும் துப்பாக்கிதாரிகள் இருக்கின்றனரா என்பதை கண்டறிய காவல்துறையினர் தேடுதல் நடத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது