140
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க நீதவான்களுக்கு புகலிடக் கோரிக்கையாளர் வழக்கு விசாரணை தொடர்பில் எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க நீதவான்கள் ஆண்டு ஒன்றுக்கு குறைந்தபட்சம் 700 புகலிடக் கோரிக்கையாளர் வழக்குகளையேனும் விசாரணை செய்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
அமெரிக்க நீதித் திணைக்களம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. அமெரிக்காவில் புகலிடக் கோரிக்கை தொடர்பான 600,000 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய நடைமுறையினால் வழக்கு விசாரணைகள் அவசர அவசரமாக மேற்கொள்ளப்படலாம் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Spread the love