21-வது பொதுநலவாய விளையாட்டுப்போட்டிகள் அஸ்திரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட் நகரில் இன்று கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது . இந்த விளையாட்டுப் போட்டிக்ள 15ம் திகதிவரை வரை 12 நாட்கள் நடைபெறவுள்ளது. தொடக்க விழாவையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் போட்டியை நடத்தும் அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, கனடா, தென்ஆப்பிரிக்கா பாகிஸ்தான், பங்களாதேஸ் உள்பட 71 நாடுகள் பங்கேற்கின்றன. வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ் இந்த போட்டிகளை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
மொத்தம் 19 விளையாட்டுகள் 275 பிரிவில் நடைபெறவுள்ளது 4,500 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்கவுள்ளனர்.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகின்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டி கடைசியாக ஸ்கொட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது