தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யப் போவதில்லை என அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் இளம் வீரர் கெமருன் பென்க்ரோப்ட் ஆகியோர் தெரிவித்துள்ளனர். தென் ஆபிரிக்காவிற்கு எதிராக அண்iமையில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் வேண்டுமென்றே பந்தை சேதப்படுத்தியதாக அவுஸ்திரேலிய அணியின் அப்போதைய தலைவர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தி தண்டனை
விதிக்கப்பட்டது.
ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் பொன்க்ரோப்ட் ஆகியோருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், தமக்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனைகளை எதிர்த்து மேன்முறையீடு செய்யும் திட்டமில்லை என இரண்டு வீரர்களும் தெரிவித்துள்ளனர்.
டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோருக்கு தலா ஓராண்டு கால போட்டித் தடையையும், பென்க்ரோப்டிற்கு ஒன்பது மாத கால போட்டித் தடையும் விதிக்கப்பட்;டுள்ளன. இந்த நிலையில், பந்தை சேதப்படுத்தியமைக்காக அவுஸ்திரேலிய கிரிக்கட் வாரியும்
வீரர்களுக்கு வழங்கிய தண்டனை அதிகப்படியானது என அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர்கள்
ஒன்றியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது