குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
டென்மார்க் நாட்டில் இருந்து வாணி தனேஷின் தலைமையின் கீழ் இயங்கும் வாணி சமூக பொருளாதார சுய மேம்பாட்டு நிறுவனத்தினரால் நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமையிலும் தமது கல்விகளைத் தொடரும் பதினோரு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு இவர்களுக்கு பாடசாலை செல்வதற்கு துவிச்சக்கார வண்டி வழங்கிவைக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவடியம்மான் கிராமத்தில் எட்டு துவிச்சக்கர வண்டிகளும் மற்றும் கிளிநொச்சியின் வட்டக்க்கச்சி, இராமநாதபுரம், தொண்டமனாறு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு ஒவ்வொரு சைக்கிளுமாக மூன்று துவிச்சக்கார வண்டிகளும் வழங்கப்பட்டன.
இத் துவிச்சக்கர வண்டிகளுடன் இராமநாதபுரம் மற்றும் உதயநகர் பகுதியில் வசிக்கும் இரண்டு பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழவாதரத்திற்கு தலா ஐம்பதாயிரம் பெறுமதியில் கோழிக் கூடு மற்றும் முட்டைக் கோழிகளும் சமூக பொருளாதார சுய மேம்பாட்டு நிறுவனத்தின் செயர்ப்பாட்டாளர்களால் வழங்கப்பட்டுள்ளது