Home உலகம் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து முதல் இடத்தை பெற்றுள்ளது

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து முதல் இடத்தை பெற்றுள்ளது

by admin


பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து 6 தங்கத்துடன் 12 பதக்கங்கள் வென்று முதல் இடத்தை பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் நேற்று பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆரம்பநிகழ்வுகள் கலைநிகழ்ச்சியுடன் ஆரம்பமாகியிருந்தது. அடுத்து இன்று போட்டிகள் ஆரம்பமாகின. முதல்நாளான இன்று இங்கிலாந்து 6 தங்கம், தலா மூன்று வெள்ளி, வெண்கலத்துடன் 12 பதக்கங்கள் வென்று முதல் இடத்தை பிடித்துள்ளது.

போட்டியை நடத்தும் அவுஸ்திரேலியா 5 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலத்துடன் 15 பதக்கங்கள் பெற்று 2-வது இடத்தை வகிக்கிறது. மலேசியா 2 தங்கங்களுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More