குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நடைபெற்ற நேற்று முன்தினம் இரவு நாடாளுமன்றத்தில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அன்றைய தினம் இரவு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாது, நாடாளுமன்ற ஊழியர்கள் பலருக்கும் உணவு இருக்கவில்லை. போதுமான அளவில் உணவு சமைக்கப்படாமையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
சாதாரணமான தினங்களில் நாடாளுமன்றத்தில் இரவு உணவாக இடியப்பம், புட்டு, பாண் போன்ற உணவுகள் வெளியில் இருந்து தருவிக்கப்படும். எனினும் விவாதம் நடைபெற்ற நேற்று முன்தினம் பாண், சோறு, நூட்லிஸ் போன்ற உணவுகளே இருந்தன. இந்த நிலையில், போதியளவில் உணவு தயார் செய்யப்படாமை தொடர்பில் ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.