குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கட்டலோனியாவின் முன்னாள் காவல்துறை மா அதிபருக்கு எதிராக பிரிவினைவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் காவல்துறை மா அதிபர் ஜோசப் லூளிஸ் ட்ராபரோ ( Josep Lluis Trapero )க்கே இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கட்டலோனியாவில், கடந்த ஆண்டு ஸ்பெய்னிடமிருந்து பிளவடைந்து சுதந்திரப் பிரடகனம் மேற்கொள்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த பிரிவினைவாத முயற்சிகளுக்கு காவல்துறை மா அதிபர் ஒத்துழைப்பு வழங்கியதாகத் தெரிவி;க்கப்படுகிறது. கட்டலோனியா ஸ்பெய்னிடமிருந்து பிளவடைவதற்கு திட்டமிட்ட அடிப்படையில் காவல்துறை மா அதிபர் உதவி வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.