Home உலகம்சீனாவில் அதிக வேலை பளு 2017-ல் 246 காவல்துறையினர் உயிரிழப்பு…

சீனாவில் அதிக வேலை பளு 2017-ல் 246 காவல்துறையினர் உயிரிழப்பு…

by admin

சீனாவில் அதிக வேலை பளு காரணமாக கடந்த ஆண்டு 2017-ல் மட்டும் 43 வயதுக்கு குறைவான 246 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

சீனாவில் கடந்த வருடம் பணியில் இருந்த போது 361 காவல்துறையினர் மரணம் அடைந்தனர் எனவும் அவர்கள் சராசரி 43 வயதுக்கு குறைவானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு குறைவான வயதில் அவர்கள் மரணம் அடைந்தது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதில் அதிக வேலைப்பளு காரணமாக 246 பேர் பணியின் போது உயிரிழந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. சீனாவில் நாள் ஒன்றுக்கு 13 முதல் 15 மணி நேரம் காவல்துறையினர் பணி புரிகின்றனர்.

இந்தநிலையில் தற் பொழுது காவல்துறையினரின் அவர்களின் நலனுக்காக பொதுமக்கள் பாதுகாப்பு துறை அமைச்சகம் பல நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி காவல்துறையினரின் குடும்பங்களுக்கான ஓய்வுதியத’ தொகை மற்றும் காப்புறுதி உயர்த்தப்படுகிறது.

மேலும் காவல்துறையினரின்வேலைப்பளுவை குறைக்க அறிவியல் பூர்வ தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More