இலங்கை பிரதான செய்திகள்

உறுதிமொழிகளை அமுலாக்க வேண்டும் – GSP + வரிச்சலுகை தொடர்கிறது…

இலங்கைக்கு GSP + வரிச்சலுகையை தொடர்ந்து வழங்குவதற்கு சர்வதேச வர்த்தகம் சம்பந்தமான ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச வர்த்தக விவகாரங்கள் சம்பந்தமான குழுவொன்று கடந்த 04ம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு GSP +  வரிச்சலுகையின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்துள்ளனர்.

GSP +  வரிச்சலுகை இலங்கைக்கு வழங்கப்பட்டு சுமார் ஒரு வருட காலத்தை நெருங்கியுள்ள நிலையில், இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து அந்தக் குழுவின் தலைவர் வ​ரவேற்பு தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த வரிச்சலுகையை இலங்கை மீளப் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்ட உறுதிமொழிகளை அமுலாக்குவதை தவறவிடக் கூடாது என்றும் அந்த குழு கூறியுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link