வட மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முக பரீட்சை எதிவரும் 19, 20 ஆம் திகதிகளில் கல்வி அமைச்சில் நடைபெற உள்ளது. இதற்கான கடிதங்கள் வடக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு அனுப்பபட்டு வருகின்றன இந்த கடிதங்கள் கிடைத்ததும் நேர்முக பரீட்சைக்கு வரும் தொண்டர் ஆசிரியர்கள் தாங்கள் பாடசாலைகளில் சேவை செய்ததற்கான உறுதிப்படுத்திய அத்தாட்சி கடிதத்தை கட்;டாயம் கொண்டு வரவு வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் இன்று (06) நடைபெற்ற வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்டமாக நியமனம் வழங்குவது தொடர்பாக கலந்துறையாடல் ஒன்று நடைபெற்றது இதன் போதே மேற்படி கருத்தினை தெரிவித்தார். தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் வடக்கு மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்கள் 494 பேருக்கு பாடசாலைகளில் சேவை செய்தற்கான பாடசாலை சம்பவ திரட்டு புத்தகத்தில் பதிவு இன்மை காரணமாக அவர்களுக்கான நியமனம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதற்கு மாற்று முறையாக தொண்டர் ஆசிரியர்கள் தாங்கள் பாடசாலைகளில் சேவை செய்ததற்கான உறுதிப்படுத்திய அத்தாட்சி கடிதத்தை நேர்முக பரீட்சைக்கு கொண்டு வர முடியும். இதனை உருதிபடுத்தும் சந்தர்பத்தில் இவர்களுக்கான நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும். எனவே நேர்முக பரீட்சைக்கு வரும் தொண்டர் ஆசிரியர்கள் அத்தாட்சி கடிதத்தை கட்டாயம் கொண்டு வரவும். வேறு காரணங்களுக்காக நிராகரிக்கபட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கபட மாட்டாதுதற்போது மொத்தமாக 676 தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கைகள் மேற்க் கொள்ளபட்டுள்ளன இவர்களில் முதல் கட்டமாக 182 தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகம்வு அன்மையில் (28) அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. மிகுதியான 494 தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்குவதற்கே மேற்படி நேர்முக பரீட்சை நடைபெற உள்ளது. என்று கூறினார்.