உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் 2-வது நாள் முடிவில் அவுஸ்திரேலியா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் 2-வது நாள் முடிவில் அவுஸ்திரேலியா 14 தங்கம் மற்றும் 36 பதக்கங்கள் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் நேற்றுமுன்தினம் கலைநிகழ்ச்சியுடன் ஆரம்பமாகிய பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளான நேற்று இங்கிலாந்து 6 தங்கம், தலா மூன்று வெள்ளி, வெண்கலத்துடன் 12 பதக்கங்கள் வென்று முதல் இடத்தை பிடித்தது. அவுஸ்திரேலியா 5 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலத்துடன் 15 பதக்கங்கள் பெற்று 2-வது இடத்தை பிடித்திருந்தது.

இந்தநிலையில் இன்று இடம்பெற்ற 2-வது நாளில் மட்டும் 21 பதக்கங்களை அவுஸ்திரேலியா பெற்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. மொத்தமாக அவுஸ்திரேலியா 14 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலத்துடன் 36 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இங்கிலாந்து 9 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலத்துடன் 18 பதக்கங்கள் பெற்று 2-வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link