177
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேகோப் சூமா(Jacob Zuma ) விற்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டில் இடம்பெற்ற ஆயுத கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
75 வயதான சூமா, டர்பன் உயர் நீதிமன்றில் முன்னலையாகியிருந்த நிலையில் இந்த வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 8ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சூமாவிற்கு எதிராக 16 ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. எவ்வாறெனினும் தாம் எந்தவொரு மோசடியிலும் ஈடுபடவில்லை என சூமா தெரிவித்துள்ளார்.
Spread the love