149
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கட்டலோனியாவின் முன்னாள் ஜனாதிபதி கார்லெஸ் பூகிடமண்ட ( Carles Puigdemont ) பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த மாதம் வட ஜெர்மனியில் வைத்து கட்டலோனியாவின் முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டிருந்தார். டென்மார்க்கிலிருந்து பெல்ஜியம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார். ஸ்பெய்னில் பிரிவினைவாதத்தை தூண்டியதாக கட்டலோனிய முன்னாள் ஜனாதிபதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love