குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் தற்போது கட்சியில் உள்ள சிரேஷ்ட அமைச்சர்களான ஜோன் அமரதுங்க மற்றும் காமினி ஜயவிக்ரம பெரேரா ஆகியோரை அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கி விட்டு, அந்த பதவிகளுக்கு இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மறுசீரமைப்பு கோரி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரமவின் வீட்டில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த விடயம் பேசப்பட்டுள்ளது. இந்த யோசனைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக்கட்சியினர் த்தை எதிர்பார்த்துள்ளதாகவும் தலைகளில் மாற்றங்களை அவர்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் பிரதமரிடம் கூறியுள்ளனர்.