Home இந்தியாபிட்கொயின் உள்ளிட்ட கிரிப்டோ நாணயத்தாள்களை வாங்கவும் விற்கவும் தடை…

பிட்கொயின் உள்ளிட்ட கிரிப்டோ நாணயத்தாள்களை வாங்கவும் விற்கவும் தடை…

by admin


பிட்கொயின் உள்ளிட்ட கிரிப்டோ நாணயத்தாள்களை வாங்கவும் விற்கவும் இந்தியாவின் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது பிட்கொயின் போன்ற மின்னணுப் பண வணிகத்தில் ஈடுபடும் அமைப்புகளோடு நிதி நிறுவனங்கள் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என நடப்பு நிதியாண்டுக்கான முதல் கொள்கை அறிக்கையில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

அத்துடன் கிரிப்டோ நாணயத்தாள் பணப் பறிமாற்றத் தொடர்புகளை முடித்துக்கொள்ள வங்கிகளுக்கு மூன்று மாத அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மின்னணுப் பணத்தை பயன்படுத்துவோர் சுமார் 50 லட்சம் பேர் இருப்பதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் மின்னணுப் பணப் பறிமாற்ற மையங்கள் நிலைகுலைந்து போயுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இதன் காரணமாக சராசரியாக ஒரு நாளில் விற்கப்படும் அளவைவிட தற்போது பிடn;காயின்கள் விற்கப்படுவது 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், தற்போது இயல்பாக இருந்திருக்க வேண்டிய விலை 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு;ளளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More