182
அண்ணா பல்கலைகழகத்துக்கு கர்நாடகவைச் சேர்ந்த சூரப்பாவை துணைவேந்தராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்திருப்பது தமிழகத்தில் சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர்கள் உள்ளிட்ட வட்டாரங்களில் பெரும் விமர்சனத்தை தோற்றுவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளமையே இதற்குக் காரணமாகும்.
இந்தியாவின் பிரதமர் பதவிக்குத்தான் ஒரு தமிழருக்கு வாய்ப்பில்லை. துணைவேந்தர் பதவிக்குமா என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோன்ற செயல்களெல்லாம் தமிழகத்தைத் தனிமைப்படுத்தவா? தனிப்படுத்தவா? ’’என்றும் டுவிட்டர் பக்கத்தில் வைரமுத்து கேள்வி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடந்து வரும் நிலையில், அண்ணா பல்கலைக்கு சூரப்பாவை நியமித்தது குறித்து நகடிர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில், நடிகர் விவேக் அவரது டுவிட்டர் பக்கத்தில் கேட்பது நீரப்பா, தருவதோ சூரப்பா என கருத்து தெரிவித்துள்ளார்.
விவேக் டுவிட்டரில் கூறியிருப்பது,
`நாங்கள் கேட்பது நீரப்பா!
நீங்கள் தருவதோ சூரப்பா!
அண்ணன் தம்பிகள் நாமப்பா!
நம்மைப் பிரிப்பது நீராப்பா?
அப்பப்பப்பா போதும்ம்ம்ம்ம்பா!
அன்னைக் காவிரி வேணும்ப்பா.’
Spread the love