இந்தியா சினிமா பிரதான செய்திகள்

நடிகர் சல்மான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.


மான் வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 1998-ம் ஆண்டு படப்பிடிப்பின் போது சல்மான்கான் மானை வேட்டையாடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.  கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று முன்தினம் வழங்கப்பட்ட தீர்ப்பில் சல்மான்கான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதுடன் ஏனையவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

அந்தவகையில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது தரப்பில் பிணை; கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது பிணை மனுவை ஏற்று ஜோத்பூர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap