180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யும் நோக்கில் ஜே.வி.பி 20ம் திருத்தச் சட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த 20ம் திருத்தச் சட்டத்திற்கு கூட்டு எதிர்க்கட்சி ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்காத போதிலும், இந்த யோசனைக்கு ஆதரவாகவே செயற்படத் தீர்மானித்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சித் தெரிவித்துள்ளது.
முழு அளவில் நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்யும் நோக்கில் 20ம் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. எனினும் இந்த சட்டத்திற்கு ஆளும் கட்சிகள் ஆதரவளிக்குமா என்பது சந்தேகமேயாகும்.
Spread the love