Home இலங்கைபுதிய அமைச்சரவையில் புதிய பழைய முகங்களுக்கு சந்தர்ப்பம்

புதிய அமைச்சரவையில் புதிய பழைய முகங்களுக்கு சந்தர்ப்பம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புதிய அமைச்சரவையில் புதிய மற்றும் பழைய முகங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் அமைச்சரவையின் பதவி நிர்ணயம் குறித்து ஆராயப்பட்டு வருகின்றது. இரண்டு கட்சிகளினதும் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றினால் இந்த விடயம் ஆராயப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி முக்கிய பதவிகளில் சிரேஸ்ட உறுப்பினர்களை அமர்த்துவதுடன், புதிய முகங்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கத் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிய உறுப்பினர்களுக்கு கூடுதல் சந்தர்ப்பம் வழங்கத் தீர்மானித்துள்ளது. பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்களித்த அமைச்சர்கள் பதவி இழக்க நேரிடலாம் எனவும் ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More