இலங்கை பிரதான செய்திகள்

வலி.வடக்கு காணி விடுவிப்புக்கான வரைபடம் கிடைக்க பெறவில்லை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணி விடு­விப்­புக்­கான உத்­தி­யோ­க­பூர்வ வரை­ப­டம் பாது­காப்­புத் தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்து இன்­ன­மும் கிடைக்­கப் பெறவில்லை என மாவட்­டச் செய­லக வட்­டா­ரங்­கள் தெரி­விகின்றன. தமிழ் சிங்­க­ளப் புத்­தாண்­டுப் பரி­சாக வலி.வடக்­கில் காணி விடு­விக்­கப்­ப­டும் என்று இரா­ணு­வத் தள­பதி மகேஸ் சேன­நா­யக்க, கடந்த சில தினங்களுக்கு முன்னர் நல்­லி­ணக்­க­பு­ரத்­தில் நடை­பெற்ற வீடு கைய­ளிப்பு நிகழ்­வில் தெரி­வித்­தி­ருந்­தார்.

வறு­த­லை­வி­ளா­னில் வீடு கையளிப்பு நிகழ்வு கடந்த வியா­ழக்­கி­ழமை நடை­பெற்­ற போது, மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் செய­லர் பொ.சுரேஷ் எதிர்­வ­ரும் 16ஆம் திகதி வலி.வடக்­கில் 650 ஏக்­கர் காணி விடு­விக்­கப்­ப­டும் என்று அறி­வித்­தி­ருந்­தார். அந்நிலையில் யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­துக்கு பாது­காப்­புத் தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்து காணி விடு­விப்­புக்­கான உத்­தி­யோ­க­பூர்வ வரை­ப­டம் இன்­ன­மும் வழங்­கப்­ப­ட­வில்லை. எனவும், எந்­தப் பகு­தி­க­ளில் காணி­கள் விடு­விக்­கப்­ப­டப் போகின்ற என்­பதை அறிந்து கொள்­வ­தற்கு இன்­ன­மும் ஒரு வாரம் வரை­யில் செல்­லும் எனவும் மாவட்­டச் செய­லக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்­டு­வ­னி­லி­ருந்து – மயி­லிட்­டிச் சந்தி வரை­யி­லான பிர­தான வீதி­யில், சுமார் 4 கிலோ மீற்­றர் நீள­மான பகுதி இரா­ணு­வக் கட்­டுப்­பாட்­டுக்­குள்­ளேயே உள்ளது. பாது­காப்­புத் தரப்­பி­ன­ரின் முன்­ன­ரங்க வேலி­கள் இந்த வீதி­யில் அகற்­றப்­பட்டு வரு­கின்­றன. இத­ன­டிப்­ப­டை­யில் இந்த வீதி­யும், இதன் மேற்­குப் புற­மா­க­வுள்ள காணி­க­ளும் விடு­விக்­கப்­ப­ட­லாம் என்று எதிர்­பார்க்கப்படுவதாக மாவட்­டச் செய­லக அதி­கா­ரி­கள் குறிப்­பி­டு­கின்­ற­னர். பாது­காப்­புத் தரப்­பி­ன­ரின் உத்­தி­யோ­க­பூர்வ வரை­ப­டம் கிடைக்­கா­மல் எத­னை­யும் உறு­தி­யா­கத் தெரி­விக்க முடி­யாது என்­றும் அந்த அதி­கா­ரி­கள் தெரி­வித்­தனர்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link