குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியலமைப்புச் சட்டத்தின் 19 வது திருத்தச் சட்டத்திற்கு அமைய பிரதமர் தனக்கு தேவையான வகையில் ஜனாதிபதியை ஆட்டி வைக்கும் அதிகாரத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி அறிந்தோ அறியாமலோ தனக்கு இருக்கும் அதிகாரத்தை பிரதமருக்கு வழங்கியுள்ளார். ஜனாதிபதி தனது அதிகாரம் பற்றி சட்டத்தரணிகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். 19வது திருத்தச் சட்டம் மூலம் பிரதமருக்கு கிடைத்துள்ள அதிகாரங்கள் காரணமாக ஜனாதிபதிக்கு எதனையும் செய்ய முடியாதுள்ளது.
அதேவேளை ஐக்கிய தேசியக்கட்சிக்குள் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. நேற்றுக் கூட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பேசியிருப்பதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.