குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தீர்மானகரமான மத்திய செயற்குழுக் கூட்டம் இன்றிரவு (9) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்றிரவு 7 மணிக்கு கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 பேர் அரசாங்கத்தில் வகிக்கும் பதவிகளில் இருந்து விலக சந்தர்ப்பம் வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது சம்பந்தமாக இன்றைய தினம் முக்கியமான முடிவு எடுக்கப்படும் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னர் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க போவதாகவும் அவர்கூறியுள்ளார். மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.