Home இலங்கைசரியான மாற்றங்கள் ஏற்படுத்தப்படாவிட்டால் ஐக்கிய தேசியக்கட்சி தோல்வியை சந்திக்கும்

சரியான மாற்றங்கள் ஏற்படுத்தப்படாவிட்டால் ஐக்கிய தேசியக்கட்சி தோல்வியை சந்திக்கும்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால், கட்சிக்குள் சரியான மாற்றங்களை ஏற்படுத்தாது போனால், ஐக்கிய தேசியக்கட்சி தோல்வியை சந்திக்கும் என அந்த கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் மறுசீரமைப்பு விடயங்கள் குறித்து நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 பேருக்கு எதிராக கொண்டு வரப்படவிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை திரும்ப பெற்றமையானது, ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை உளவியல் ரீதியாக பாதிக்கும் செயல் எனவும் அத்தநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More