சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு போராளிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இஅவர்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன.
அதேவேளை ரஸ்யா, ஈரான் ஆகிய நாடுகள் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து போராளிகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. இந்தநிலையில், கிழக்கு கூட்டா பகுதிக்கு உட்பட்ட டூமா நகரில் விமானப்படையை சேர்ந்த ஹெலிகொப்டர்கள் நடத்திய தாக்குதலில் 80-க்கும் அதிகமானோர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கண்காணிப்புக்குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவைக கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. சிரியா அரசு நடத்திய ரசாயன தாக்குதல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா , சுவீடன், போலந்து, நெதர்லாந்து, குவைத், பெரு மற்றும் ஐவரி கோஸ்ட் உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளதையடுத்து, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது