168
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் குறைந்தபட்சம் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் முகாமின், ஜோர்தான் மற்றும் எகிப்து அமைதி காக்கும் படையினர் தங்கியுள்ள வீடுகள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிதாரியொருவர் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலைவயில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரையில் எவரும் உரிமை கோரவில்லை.
Spread the love