201
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் கந்தாலா பகுதியில் வீதியோர தடுப்பில் பாரவூர்தி ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் பாரவூர்திலிருந்த 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை சதாரா – புனே நெடுஞ்சாலையில் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த குறித்த பாரவூர்தி அங்குள்ள வளைவு ஒன்றில் திரும்பிய போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர தடுப்பில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love