Home இலங்கைபுத்தாண்டின் பின்னர் எரிபொருள் விலை உயர்த்தப்படலாம்…

புத்தாண்டின் பின்னர் எரிபொருள் விலை உயர்த்தப்படலாம்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


புத்தாண்டின் பின்னர் எரிபொருளின் விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எரிபொருட்களின் விலை உயர்த்தப்படாத காரணத்தினால் நாள் தோறும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 380 மில்லியன் ரூபா நட்டமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாள் தோறும் நட்டத்துடன் நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன நிர்வாகம் அறிவித்துள்ளது. லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் ஏற்கனவே எரிபொருளுக்கான விலைகளை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வினால், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருளுக்கான கேள்வி உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More