196
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
விடுதலைப்புலிகளின் நிர்வாகசேவை தலைமை அலுவலகமான தமிழீழ நிர்வாக சேவை நடுப்பணியகம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றத்திற்கு பின்னர் குறித்த காணியையும், அங்குள்ள கட்டிங்களையும் இராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. இதனை அவர்கள் தங்களது படைகளுக்கான உணவு களஞ்சியமாக பயன்படுத்தி வந்திருந்தனர். இந்த நிலையில் குறித்த காணி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த காணியும் அங்குள்ள கட்டிடங்களும் தற்போது கரைச்சி பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love