குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை மாடிசன் ப்ரெஞ்சில் ( Madison Brengle ) சர்வதேச டென்னிஸ் பேரவை மற்றும் மகளிர் டென்னிஸ் ஒன்றியம் ஆகியனவற்றுக்கு எதிராக வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளார். அடிக்கடி அடிக்கடி ஊக்க மருந்து சோதனை நடத்தியதனால் தமக்கு உபாதைகள் பாதிப்புக்கள் ஏற்பட்டதாக மாடிசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனால் தமக்கு ஏற்பட்ட உபாதைகளுக்கு சர்வதேச டென்னிஸ் பேரவையும், மகளிர் டென்னிஸ் ஒன்றியமும் பொறுப்பு சொல்ல வேண்டுமென தெரிவித்துள்ளார். இரத்த மாதிரிகள் சோதனை இடுவதற்காக அடிக்கடி ஊசிகள் கைகளில் ஏற்றியதனால் கைகளில் வீக்கம் ஏற்பட்டு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டது என குற்றம் சுமத்தியுள்ளார். இந்த பாதிப்புக்களுக்கு நட்டஈடாக 10 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட வேண்டுமெனக் கோரி வழக்குத் தொடர்வதற்கு மாடிசன் தீர்மானித்துள்ளார்.