வடமாகாண அமைச்சர்கள் மீது யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகையினால் முன்வைக்கப்பட்ட மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், பிரதம செயலாளர் ஊடாக விசாரணை நடத்துமாறு மாகாண ஆளுநர் றெஜினோல் கூரே, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கேட்டுள்ளார். இது தொடர்பாக ஆளுநர், முதலமைச்சருக்கு நேற்றைய தினம் (10) கடிதம் அனுப்பியுள்ளார்.
வடமாகாண அமைச்சர்கள் மீது மோசடிக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று, மோசடிக்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட அமைச்சர்கள் பதவியிலிருந்து விலகியிருந்தனர்.
இந்நிலையில், புதிதாக பதவியேற்ற மூன்று அமைச்சர்கள் மோசடியில் ஈடுபடுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது. என்பது குறிப்பிடத்தக்கது.