198
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சம்பள உயர்வினை வலியுறுத்தி ஜே.வி.பி கட்சி பாரியளவில் போராட்டம் முன்னெடுக்க உள்ளது. ஜே.வி.பி.யின் அரசியல் பீட உறுப்பினர் கே.டி. லால்காந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் மக்களின் வாழ்க்கைச் செலவு 6000 ரூபாவினால் உயர்வடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, எதிர்வரும் மே மாதம் 1ம் திகதி மே தினக் கூட்டத்தை ஜே.வி.பி நடத்தும் எனவும், மே தின நிகழ்வுகளை எவரினாலும் ஒத்தி வைக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love