குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரிய விவகாரம் தொடர்பில், ரஸ்யாவிற்கு அமெரிக்கா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியாவில் ரஸ்யா மற்றும் சிரியா படையினர் இரசாயன ஆயுத தாக்குதல்களை நடத்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரஸ்யாவின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியாவில் வாழும் அப்பாவி மக்களை பாதுகாப்பதற்கு எந்தவொரு எல்லைக்கும் செல்ல தயங்கப் போவதில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிரியாவில் இராணுவத் தாக்குதல்களை நடத்துவது குறித்து இதுவரையில் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை தெரிவித்துள்ளது. ‘ஆயத்தமாக இருங்கள் விரைவில் வருகின்றோம் ரஸ்யா’ என அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் டுவிட்டரில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சொந்த மக்களை கொன்று மகிழ்ச்சியடையும் பழக்கம் மிருகங்களுக்கே உண்டு எனவும் தெரிவித்துள்ள டரம்ப் இரசாயன ஆயுத தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.