Home உலகம் என்னுடைய தனிப்பட்ட தரவுகளும் ரகசியமாக எடுக்கப்பட்டுள்ளது

என்னுடைய தனிப்பட்ட தரவுகளும் ரகசியமாக எடுக்கப்பட்டுள்ளது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தனிப்பட்ட தரவுகள் ரகசியமாக எடுக்கப்பட்டதில் தன்னுடைய தரவுகளும் அடங்கியுள்ளன என முகப்புத்தக தலைமை செயலதிகாரி மார்க் ஜுக்கர்பர்க் தெரிவித்துள்ளார். இரண்டாவது நாளாக வோசிங்டனில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆய்வு நடத்தி வருவதாகவும் மார்க் ஜுக்கர்பர்க் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற மென்பொருட்களை வடிவமைக்கும் ஆய்வாளர்கள் பலர் கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தில் உள்ளதனை கண்டறிந்துள்ளதாகவும் இதற்கு தங்களிடம் இருந்து பலமான எதிர்வினை இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு தமக்கு உள்ளது எனவும் மார்க் ஜுக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
இந்த தரவுகள் எடுக்கப்பட்ட விடயம் தொடர்பாக குறித்த அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தின் தற்காலிக தலைமை செயலதிகாரியை பதவி இறங்குவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளமை இந்தவிவகாரத்தில் ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More