குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
அமைச்சரவையில் மாற்றங்களை செய்யாது உடனடியாக நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் அமைச்சர்களுக்கு வெட்கமில்லை என்பது மட்டுமல்ல ஒழுக்கமும் இல்லை. இப்படியானவர்களுக்கு வாக்களிக்கும் மக்கள் இவற்றுக்கு பொறுப்புக் கூற வேண்டும். அரசியல் நெருக்கடி ஏற்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்கள் விடுதலை முன்னணி மக்களுக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளது. இந்த நிலையில், தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்துச் செய்யும் போராட்டத்தை தொடங்கியுள்ளதாகவும் லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.