Home உலகம் எதிர்வரும் சனிக்கிழமை பொது மற்றும் தனியார்துறையினருக்கு விடுமுறை…

எதிர்வரும் சனிக்கிழமை பொது மற்றும் தனியார்துறையினருக்கு விடுமுறை…

by admin

ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கம்.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

எதிர்வரும் சனிக்கிழமை பொது மற்றும் தனியார்துறையினருக்கு விடுமுறை என ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அல் இஸ்ரா வால் மிராஜ் தினத்தை முன்னிட்டு இவ்வாறு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அரசாங்க ஊழியர்களுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. அரசாங்கத்தின் மானுட வள அதகாரசபையினால் விடுமுறை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் அதிகாரசபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொழில் புரியும் பெண்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு சம அளவில் சம்பளம் வழங்கப்பட வேண்டுமென அண்மையில் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. சம்பள முரண்பாடுகள் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்றாகும் எனவும், மேலும் பல்வேறு விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. பணியிடங்களில் பெண்களுக்கு திருப்திகரமான சூழ்நிலையை உருவாக்குவதற்கு இன்னும் பல்வேறு விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமென தொழில்துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More