குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தாலும் கூட்டு எதிர்க்கட்சியினருடன் இணைய போவதில்லை என முன்னாள் அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் தமது அணியினருடன் இணைந்து கொள்ள மாட்டார்கள் எனவும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தாலும் நாட்டின் நலன்களுக்காக அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து வெளியிட்ட சந்திம வீரக்கொடி, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து மக்களின் நலனுக்காக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.