143
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தொகுதியினருடன் இணைந்து புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை முன்னெடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து அமைச்சுக்களின் சகல துறைகளும் விஞ்ஞான ரீதியில் பிரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய தர வர்க்கத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசாங்கம் வீடுகளை நிர்மானிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love