149
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரிய இரசாயன தாக்குதல் தொடர்பிலான ஆதாரங்கள் உண்டு என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். சிரியாவின் டூமா நகரில் இரசாயன ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியமைக்கான ஆதாரங்கள் உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தாக்குதலுக்கு பதிலடி வழங்குவது குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அநேகமான மேற்குலக நாடுகள் பதில் தாக்குதல் நடத்தப்பட வேண்டுமென்ற வகையில் கருத்து வெளியிட்டுள்ளன.
மேற்குலக நாடுகளின் இந்த நடவடிக்கைகள் பிரச்சினைகளை மேலும் பூதாகாரமாக்கும் என ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love