காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் உச்சகட்ட போராட்டம் நடந்து வருகின்ற நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் சிம்பு, காவிரி நதி நீர் பிரச்சினையை இரு மாநில அரசியல்வாதிகளும் சுயலாபத்துக்காக முடிவுக்கு கொண்டுவராமல் உள்ளனர் எனவும் அப்பாவி மக்களிடம் இனவாதத்தை தூண்டும் வகையில் பேசிவருகிறார்கள்.
இதனால் இரு மாநில மக்களிடமும் தேவையில்லாமல் வெறுப்புணர்வு அதிகரித்துவருகிறது எனவும் இந்த பிரச்சினையை அரசியலாக பார்க்காமல், மனித நேய பிரச்சினையாக பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
நீதிமன்றத்தில் போய் நீர் கேட்பதை விட, பக்கத்தில் இருக்கும் கன்னட சகோதரர்களிடம் அன்போடு நீரை கேட்க வேண்டும். அப்படி கேட்டால் காவிரி நீர் கண்டிப்பாக தமிழகத்துக்கு கிடைக்கும். காவிரி நீரை தமிழர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு கன்னடர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
இதை உணர்த்தும் வகையில் கன்னட மக்கள் ஒரு குவளை தண்ணீரை கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு கொடுத்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், கர்நாடகாவில் வாழும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் சிம்புவின் கருத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சிம்புவின் மனித நேய கருத்தை கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிட்டு கன்னடர்களின் ஆதரவை கோரினர். பெங்களூரு தமிழ் நண்பர்கள், பெங்களூரு டாக்கீஸ், பெங்களூரு தமிழ் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட குழுவினர் இந்த கருத்தை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பினர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை 3 மணி முதல் 6 மணி வரை பல்வேறு கன்னட அமைப்பினர் பெங்களூரு பேருந்து நிலையங்கள் மற்றும் புகையிரத நிலையங்களில் தமிழர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தனர்.
இதே போல கன்னட மக்கள் தங்களது வீடுகளின் அருகில் வசிக்கும் தமிழர்களுக்கு ஒரு குவளை நீரை வழங்கினர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் கன்னடர்கள் தங்களது தமிழ் நண்பர்களுக்கு குடிக்க நீரை வழங்கி அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.
மேலும் முகப்புத்தகம், ருவிட்டர், இன்ஸ்ட்ராகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ” சூருnவைநகுழசர்ரஅயnவை” என்கிற ஹாஷ்டேக் டிரெண்டிங் ஆனது.
இதுவரை தமிழர்களை தாக்கிய கன்னட அமைப்பினரும், வெறுப்பாக பேசிய கன்னட நண்பர்களும், ஏராளமான பெண்களும், குழந்தைகளும் மனித நேயத்துடன் அன்பை வெளிப்படுத்தியதை பார்க்கும் போது நெகிழ்ச்சி ஏற்பட்டடுள்ளது.
அதிலும் ஒரு பெண் கனிவான குரலில், ‘என் மகன் சிம்பு கேட்ட ஒரு குவளை தண்ணீரை தருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த பூமியில் நல்ல மழை பெய்து, காவிரி தாய் செழிப்பாக பாயவேண்டும்’ என பேசியது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.