143
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
எதிர்வரும் 23ம் திகதி முழு அளவில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது. விஞ்ஞானபூர்வ அடிப்படையில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், அண்மையில் அமைச்சுப் பதவிகளை இழந்த இரண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு மீளவும் பதவி வழங்கப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வெற்றிடமாகியுள்ள அமைச்சு மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
Spread the love